சனத் நிஷாந்த பயணித்த ஜீப் வண்டி விபத்து!

0
138

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் வண்டி, தங்கொட்டுவ பகுதியில் வைத்து தாக்கி சேதப்படுத்தப்பட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இராஜாங்க அமைச்சர் பயணித்த சொகுசு ஜீப் வண்டி, மற்றுமொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து, அந்த காரில் பயணித்தவர்கள் அமைச்சரின் வாகனத்தை தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தங்கொடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் பங்குபற்றச் சென்ற வேளையில் மாரவில மொதரவெல்ல தேவாலயத்திற்கு முன்பாக வங்குவ பிரதேசத்தில் இன்று (29) இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதல் தொடர்பில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அமைச்சரின் சொகுசு ஜீப் மற்றைய காரை சேதப்படுத்தியதாகவும் அதில் பயணித்த கோடீஸ்வர தொழிலதிபர் தனது வாகனத்திற்கு ஏற்பட்ட சேதத்தை பார்த்து கடும் ஆத்திரமடைந்து இரும்பினால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here