ஜனவரி நடுப்பகுதியில் மின் கட்டணம் குறைகிறது

Date:

இலங்கை மின்சார சபை (CEB) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவை முன்வைக்க உள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது ‘X’ (டுவிட்டர்) தளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதுடன், அடுத்த வாரம் இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

முன்னெப்போதும் இல்லாத அளவு நாட்டில் மழைப்பொழிவு பதிவாகியுள்ளதால் ஜனவரி நடுப்பகுதியில் மின்கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கஞ்சன, ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்த பின்புலத்திலேயே மேற்படி அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

மின் கட்டணத் திருத்தம் நுகர்வோருக்கு சாதகமான வகையில் அமையும் எனவும் இலங்கை மின்சார சபையில் மேற்கொள்ளப்பட வேண்டிய விரிவான சீர்திருத்தங்களுக்கான பாராளுமன்ற அங்கீகாரம் விரைவில் பெறப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டின் BYD வாகன ஷோரூம் முன் போராட்டம்

கொழும்பில் உள்ள ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டின் BYD...

நாகை மீனவா்கள் 31 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவா்கள் 31 பேரை இலங்கை...

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...