லிந்துலை பொலிஸ் பிரிவில் பெரிய ராணிவத்தை தோட்டத்திலுள்ள லயன் வீடுகளில் இன்று (04) அதிகாலை தீ பரவியுள்ளது.
லயன் வீடொன்றில் ஏற்பட்ட தீயை அணைக்க வீட்டின் இருபுறமும் இருந்த இரண்டு வீடுகளின் கூரைகளை விரைவாக அகற்றியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த தீயினால் தோட்ட வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும், அங்கிருந்த சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாகவும், உயிர்ச்சேதம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மூன்று லயன் வீடுகளிலும் வசித்து வந்த சுமார் 10 பேர் இடம்பெயர்ந்துள்ளதுடன், அவர்கள் தற்காலிக இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.