இலங்கைக்கு 20 ரயில் எஞ்ஜின்களை இலவசமாக வழங்கும் இந்தியா

0
191

இலங்கைக்கு 20 ரயில் எஞ்ஜின்களை இலவசமாக வழங்க இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது.

பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட 20 டீசல் எஞ்ஜின்களை இலங்கை்க்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ.பண்டார தெரிவித்துள்ளார்.

அவற்றை இந்நாட்டின் ரயில் பாதைகளில் இயக்க முடியுமா என சமீபத்தில் இந்தியா வந்த ரயில்வே துறை நிபுணர்கள் குழு ஆய்வு செய்திருந்தது.

இதனையடுத்தே முதல் கட்டமாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டு எஞ்ஜின்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here