சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கச்சா எண்ணெயை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. வரும் ஜூலை மாதத்திற்குள் எண்ணெய் இருப்புக்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பிறகு வரும் காலத்திற்கு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யவும் சுத்திகரிப்பு ஆலைக்கு கச்சா எண்ணெயை வழங்குவதற்கும் ஒரு சைப்ரஸ் நிறுவனம் கேட்க்கப்படாத திட்டத்தை சமர்ப்பித்துள்ளது. இது 180 நாள் கடன் அடிப்படையில் கச்சா எண்ணெய் வழங்கும் திட்டமாகும்.
அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கொள்முதல் தொடர்பான சிறப்பு நிலைக்குழுவின் மதிப்பீட்டின்படி, 450,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, கச்சா எண்ணெய் இருப்புக்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எரிசக்தி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதேவேளை, இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் இருந்து 40,000 மெற்றிக் தொன் எரிபொருள் கொள்வனவு செய்யவும் அதில் . 40,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 40,000 மெட்ரிக் டன் பெட்றோலையும் கொள்வனவு செய்ய எரிசக்தி அமைச்சு IOC நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்திய நிறுவனம் 40,000 மெட்ரிக் டன் டீசலை வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாக தற்போது தெரியவருகின்றது .
நாட்டை இருளில் தள்ள அரசாங்கம் அனுமதிக்காது. ஆனால் மக்களாகிய நாம் ஒரு மின்விளக்கை அனைத்து அல்லது மாற்றுவழியை பயன்படுத்தி சாதகமான முறையில் எரிபொருள் பிரச்சினையை தீர்ப்பதற்கு நம்மால் இயன்ற பங்களிப்பை வழங்க வேண்டும்.