சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
குறித்த முறைப்பாடு தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.