திங்கட்கிழமை நாடு தழுவிய அளவில் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து சுகாதார பணியாளர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு மருத்துவ சேவைகளின் ஐக்கிய முன்னணி தீர்மானித்துள்ளது.
இந்த வேலை நிறுத்தத்தில் 27 தொழிற்சங்கங்கள் இணைந்து கொள்ளவுள்ளதாக அந்த முன்னணியின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.