டெங்கு நோய் தீவிரமடைந்து ஹொரணை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவி ஒருவர் இன்று (16) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் அயந்தி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
பொருவ, மாபுட்கலவை வசிப்பிடமாகக் கொண்ட கொழும்பு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவியான ஹஸினி என்பவரே உயிரிழந்துள்ளார்.
தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுமதிக்கப்படும்போது அவர், சுயநினைவை இழந்து விட்டதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.