நாரம்மலயில் அண்மையில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த ரொஷான் குமாரதிலகவின் சம்பவம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தனது அனுதாபத்தை தெரிவித்ததுடன், தனது டுவிட்டர் தளத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“நாரம்மல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த ரொஷான் குமாரதிலக்கவின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த முட்டாள்தனமான செயலை நான் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறேன். குற்றவாளிகளுக்கு எதிராக விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கிறேன்” என்றார்.