அமெரிக்கா முழுவதும் கடந்த ஒருவாரமாக தொடரும் கடும் பனிப்புயல் காரணமாக 90 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டென்னசியில் 25 பேரும், ஓரிகானில் 16 பேரும் அதிகளவில் உயிரிழந்துள்ளனர்.
கடும் பனிப்புயலால் குறித்த பகுதிகளில் தொடர்ந்தும் அவசரகால நிலையில் உள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்லாயிரக் கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் உள்ளனர்.
அடுத்த சில நாட்களில் பனிமூட்டம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்தில் அமெரிக்க முழுவதும் கடும் பனிப்புயலால் குறைந்தது 92 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல்களை அடிப்படையாக கொண்டு பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.