நாடாளுமன்றத்தில் அவசர வாக்கெடுப்புக்கு சபாநாயகர் அழைப்பு விடுத்தார்.
நிகழ்நிலை காப்பு மசோதாவை விவாதிப்பதா இல்லையா என்பதை முடிவு செய்ய இந்த வாக்கெடுப்பு கோரப்பட்டது.
அங்கு பிரேரணைக்கு ஆதரவாக 93 வாக்குகளும் எதிராக 50 வாக்குகளும் பதிவாகின.
நிர்ணயிக்கப்பட்ட முறைப்படி தாக்கல் செய்யப்படாததால், இந்த மசோதா மீது விவாதம் நடத்துவது சரியல்ல என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
பாராளுமன்றம் ஆரம்பமாகிய நிலையில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக சபையையும் சபாநாயகர் ஒத்திவைத்தார்.