யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறையில் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்ஸும் தனியார் பஸ்ஸும் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்தனர்.
ஒருவர் படுகாயமடைந்த நிலையிலும், எழுவர் சிறியளவான காயங்களுடனும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட்னர்.
பஸ்ஸின் சாரதிகள் இருவரும் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இன்று காலை 6.30 மணியளவில் பயணி ஒருவரை ஏற்றுவதற்காக இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் வீதியில் நிறுத்தப்பட்ட நிலையில் பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ் மோதியுள்ளது.
இதன்போது இரண்டு பஸ்களும் பலத்த சேதமடைந்தன. காயமடைந்தவர்கள் அம்புலன்ஸ் வாகனம் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.