VATக்கு பதிவு செய்யாமல் VAT வசூலிக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து உள்நாட்டு வருவாய்த் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அதன்படி 24.01.2024 அன்று கொழும்பு நகர எல்லையில் இயங்கும் நிறுவனமொன்று VAT இல் பதிவு செய்யப்படாத மற்றும் VAT அறவிடப்படுவது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான அலுவலக வளாகத்திற்குள் நுழைய யாரும் அனுமதிக்கப்படாமல், இருந்த நிலையில் அங்கு பொலீஸார் சென்று பூட்டைத் திறந்து உள்ளே நுழைந்து, விசாரணை நடத்தி, உரிய ஆவணங்கள் மற்றும் தகவல்கள் அடங்கிய கணினிப் பிரிவைக் கைப்பற்றினர்.
இந்நிலையில் தகவல்களின் சரியான தன்மையை கண்டறியவும், சரியான வரி செலுத்தப்பட்டுள்ளதா என விசாரிக்கவும் தணிக்கை பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருவாய் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.