கடத்தப்பட்ட மீனவர்களுடனான தொடர்பு துண்டிப்பு

0
198

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை மீன்பிடி கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போது லோரன்சன் 4 இல் கடத்தப்பட்ட குழுவினர் இலங்கை அதிகாரிகளுடன் எவ்வித தொடர்பும் கொள்ளவில்லை எனவும் கடத்தல்காரர்கள் அரசாங்கத்திடம் எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை எனவும் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.

ஜனவரி 12 ஆம் திகதி திக்கோவிட்ட துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட கப்பல், சீஷெல்ஸுக்கு வடக்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் கடத்தப்பட்டது.

கப்பலில் 6 இலங்கை மீனவர்கள் இருந்ததாக நம்பப்படுகிறது.

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட போதிலும், மீனவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு “அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றது” என்று கஹவத்த உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here