கடந்த 2018 ஆம் ஆண்டு, நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக பதவி வகித்த அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ரணில் விக்கிரமசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மனுவை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பில் நீதிமன்றில் சாட்சியமளிக்குமாறு பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மனு தொடர்பான அடிப்படை உண்மைகளை பரிசீலித்த நீதிபதிகளான எஸ். துரைராஜா, குமுதுனி விக்கிரமாதித்தன் மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.