மாணவர்களின் பல கோரிக்கைகளை முன்வைத்து, களனிப் பல்கலைக்கழகத்தின் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தை சுற்றிவளைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று இரவும் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியதுடன், இதனால் கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்தும் தடைப்பட்டது.
போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்ததையடுத்து மாணவர் செயற்பாட்டாளர்கள் பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தை முற்றுகையிட்டு நேற்று இரவு போராட்டத்தை தொடர்ந்தனர்.
ஜனாதிபதியின் பல்கலைக்கழக வருகைக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.