தான் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி வேறு கட்சியில் இணைந்துள்ளதாக சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் நெருக்கடிகளை தீர்க்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீது நம்பிக்கை உள்ளதாக ரத்நாயக்க வலியுறுத்தினார்.