தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (01) காலை 6.30 மணி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை 6.30 மணி முதல் ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என சுகாதார தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய் DAT கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி சுகாதார தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகளும் இன்று முடங்கின.
இதனால் நோயாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியிருந்ததுடன், வைத்தியசாலை நடவடிக்கைகளை தொடர்வதற்காக படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் அரசாங்கத்தினால் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் எவ்வித சாதகமான பதில்களும் கிடைக்காததால் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.