பறிபோகிறது கெஹலியவின் பதவி

0
146

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை அமைச்சரவையில் இருந்து நீக்குவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டம் கவனம் செலுத்தியுள்ளது என்று தெரியவருகின்றது.

முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல தற்போது சுற்றாடல் அமைச்சராகப் பதவி வகிக்கின்றார். சுகாதார அமைச்சராகக் கடமையாற்றிய காலத்தில் தரமற்ற மருந்துப் பொருள்களை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம் குற்றப்புலனாய்வு பணிமனை கடந்த 2ஆம் திகதி கெஹலியவைக் கைது செய்திருந்தது.

கடந்த மூன்றாம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட கெஹலிய ரம்புக்வெலவை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மோசடிச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் உள்ள ஒருவரைத் தொடர்ந்தும் அமைச்சரவையில் வைத்திருப்பதன் மூலம் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படக்கூடும் என்று பல்வேறு தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. அதையடுத்து அமைச்சர் பதவியில் இருந்து கெஹலிய ரம்புக்வெலவை நீக்குவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டம் தீவிர கவனம் செலுத்தியுள்ளது என்று உயர்மட்ட அரசாங்க வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here