இரு துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் சார்ஜன்ட் பலி, பெண் படுகாயம்

Date:

மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டியை சோதனை செய்து சந்தேக நபரை கைது செய்யும் போது ஏற்பட்ட கைகலப்பின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பொலிஸ் சார்ஜன்ட் நேற்று (11) இரவு உயிரிழந்துள்ளார்.

படேபொல பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சார்ஜன்டுடன் சண்டையிட்ட சந்தேக நபர் கைத்துப்பாக்கியுடன் தப்பிச் சென்றுள்ளார்.

காயமடைந்த சார்ஜன்ட் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பிங்கிரிய பிரதேசத்தில் நேற்று மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், கம்பஹா – யாகொட வீதியில் காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதேவேளை மீகொட விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (11) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

அந்த மையத்தில் உள்ள கடையில் கொள்ளையடிக்க வந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் காயமடைந்தார் மற்றும் சந்தேக நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபை குறித்து ஆராய சிறப்புத் தேர்வுக் குழு

மாகாண சபை முறைமை மற்றும் தேர்தல்களை நடத்துவது குறித்து முடிவு செய்வதற்காக...

நாமல் – சுமந்திரன் இடையில் சந்திப்பு

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,...

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகம்

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று (14) முதல்...

இந்த வரவு செலவு திட்டத்தை தோண்டத் தோண்ட தங்கம் வரும்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தாக்கல் செய்த 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்,...