நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் யோசனையானது ஜனாதிபதி தேர்தலை நடத்துவதை தடுக்கும் சதி என சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக கொண்டு வரப்பட்டுள்ள நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் யோசனை, ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் தடுப்பதற்காக அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் அமுல்படுத்தப்படும் சதியாகும்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது ஒரு பொறி எனவும், இது தேர்தலை காணாமலாக்கும் எனவும் உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார்.