ஐந்தே மாதங்களில் திருக்கோவில் மக்களின் துயர் துடைத்த ஆளுநர்!

Date:

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு ஐந்து மாதக் காலத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த மக்கள் வசிப்பற்கு வீடுகள் இன்றி இன்னல்களுக்கு முகம்கொடுத்து வந்தனர்.

இவ்விடயம் தொடர்பாக அம்பாறை மாவட்ட அரச அதிபர், திருக்கோயில் பிரதேச செயலாளர், அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்களால் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

ஆளுநர் செந்தில் தொண்டமான் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு, மக்களின் குறைகளை கேட்டறிந்து மக்களின் கோரிக்கையை ஏற்று ஐந்து மாதக் காலத்திற்குள் அவர்களுக்கான வீடுகளை நிர்மாணித்து அம்மக்களிடம் கையளித்துள்ளார்.

தங்களது கோரிக்கையை குறுகிய காலத்தில் நிறைவேற்றியமைக்காக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திருக்கோயில் பிரதேச செயலாளருக்கும் திருக்கோவில் பிரதேச மக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...