வலி. வடக்கு இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த ஆலய வழிபாடுகளுக்கு தடை நீக்கம்!

Date:

யாழ். வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரிவில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 07 ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்த இராணுவத்தினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில், பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளிட்ட 07 ஆலயங்களுக்கு சென்று வழிபடவே இராணுவத்தினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதித்துள்ளனர்.

இதன்படி, ஆலய வழிபாடுகளுக்கு செல்ல விரும்புவோர் தமது பெயர், விலாசம், அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் என்பவற்றை ஆலய நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விபரங்களை நிர்வாகத்தினர் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகத்திடம் ஒப்படைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், உயர் பாதுகாப்பு வலயத்தினுள் செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை இராணுவத்தினரே மேற்கொள்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பணவீக்கம் 5.5% ஆக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்த பணவீக்கம்...

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...

முக்கிய அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில...

அன்று நடந்த சம்பவம் ஒன்று!

இது 2022 ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நடந்த சம்பவம் என...