நிலவும் அதிக வெப்பமான வானிலை எதிர்வரும் ஏப்ரல் நடுப்பகுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே முடிந்தவரை வௌிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு திணைக்களத்தின் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
காற்றின் வேகம் குறைவடைந்துள்ளமை மற்றும் வானில் முகில் கூட்டம் குறைவடைந்துள்ளமை என்பன இந்த வெப்பநிலைக்கான காரணமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, அதிக வெப்பம் நிலவுவதால் இன்றும் (29) நாளையும் (01) பாடசாலை மாணவர்களை வௌிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு அனைத்து பாடசாலைகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளது.
கடும் வெப்பம் நிலவும் சந்தர்ப்பங்களில் திறந்தவௌியில் பயிற்சிகள் அல்லது விளையாட்டு விழாக்களை நடத்துவதை தவிர்த்துகொள்ளுமாறு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.