பாதுகாப்புச் செயலாளரிடம் ஆளுநர் நேரில் கோரிக்கைபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
வடக்கில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை, மீள்குடியேற்றம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு விடுவிப்பது தொடர்பில் ஆளுநரால் பாதுகாப்புச் செயலாளரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
அதற்கு அமைவாக, காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்ந்து விரைவில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்குத் தாம் பரிந்துரைகளை அனுப்புவதாகப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரிடம் இதன்போது உறுதியளித்தார்.