சதித் திட்டங்கள் எதுவுமின்றி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் காட்டுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று அனுராதபுரம் சல்கடுவ மைதானத்தில் விடுத்த சவாலை ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இதனைத் தெரிவித்தார்.
பல வருடங்களாக ஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கத்திற்கு சவால் விடுப்பதாகவும் மக்கள் ஆணை யாருக்கு இருக்கின்றது என்பதை கண்டறிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் மரிக்கார் கூறியுள்ளார்.
பிரதமரின் சவாலை ஏற்று அடுத்த மாதம் அனுராதபுரம் சல்கடுவ மைதானத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.