Monday, January 20, 2025

Latest Posts

தமிழர்களிடம் மீண்டும் ஆயுதம் திணிக்கும் செயலே வெடுக்குநாறிமலை விவகாரம்: மா.சத்திவேல் கண்டனம்

வெடுக்குநாறிமலை சிவ வழிபாடு சம்பவமானது வன்முறை அரசியலை விரும்புகின்றனர் என்பதை உலகிற்கு வெளிப்படுத்தி உள்ளதுடன் தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் இன்று (09.03.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “வவுனியா வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவிலில் நீதிமன்ற அனுமதியுடன் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிவ பக்தர்களையும், வழிபாட்டையும் அவமானப்படுத்தும் வண்ணம் பொலிஸார் வழிபாட்டு பொருட்களை சப்பாத்து காலால் உதைத்து தள்ளியதோடு, பெண்களை இழிவுபடுத்தியும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட ஆறு பேரை கைது செய்துள்ளனர்.

இதில் நேரடியாக பாதிக்கபட்டவர்களுக்கும், ஒட்டுமொத்த சிவ பக்தர்களுக்கும் வருத்தத்தை தெரிவிப்பதோடு நாட்டின் அடிப்படை மனித உரிமையும் மற்றும் வழிபாட்டு உரிமையையும் மீறும் செயல் மட்டுமல்ல தமிழர்கள் மீதும் இந்துக்கள் மீதும் தொடர்ந்து கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத மதவாத வன்முறையின் தோற்றமுமாகும்.

இதில் பொலிஸார் அராஜகத்தோடு பேரினவாத அதிகார அரசியல் பக்க பலமும் அதற்கு உள்ளது என்பதை உணரக்கூடியதாக உள்ளது.

இதனை சமயம் கடந்து அனைத்து சமய தலைவர்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தமது எதிர்ப்பை கூட்டாக வெளிக்காட்ட வேண்டும்.

இனவாத மதவாதம் அடிப்படை கருத்தியலில் இயங்கும் பயங்கரவாத அரசின் கூலிகளாக இயங்கும் பொலிசாரே இனவாத ,மதவாத அதிகார வெறியினை சிவ பக்தர்களிடம் காட்டியுள்ளமை வெட்கக்கேடு.

இந்நிலையில், ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே தமிழர்களின் வழிபாட்டு உரிமை மீறப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தில் தமிழர்களின் வாக்குகளை எதிர்பார்த்து அரசியல் செய்யும் தென்பகுதி கட்சிகள் வெடுக்குநாறிமலையில் நடந்த அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும் அதனை தூண்டிவிட்டு குளிர் காய்பவர்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவிக்க வேண்டும்.

சர்வதேச பெண்கள் தினத்தில் வழிபாட்டில் கலந்து கொண்ட பெண்களை அவமானப்படுத்தியதற்கு பெண்கள் தினத்தை கொண்டாடிய அனைத்து சக்திகளும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும்.

மேலும், தமிழர் தாயகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புகளும், செயற்பாட்டாளர்களும் தமிழர் தாயத்தை சூழ்ந்துள்ள இருளினை கருத்தில் கொண்டு விழிப்பு நிலையில் இருக்க வேண்டும்.

அத்தகைய விழிப்பினை கடந்த வாரம் சாந்தனின் வித்துடல் எடுத்து சென்ற போது காட்டியது போன்று ஒன்றுபட்ட சக்தியாக வெளிப்படுத்துவதற்கான காலம் உருவாகி வருகின்றது என்பதை உணர்ந்து தேசிய சிந்தனையோடு கூட்டாக செயல்படுவதையும் உறுதி செய்தல் வேண்டும்” எனவும் அருட்தந்தை மா.சத்திவேல் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

கொழும்பு நகரின் காற்று மாசுபாடு நிலைமை மோசமாகி வருவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு நகரில் காற்றின் தர சுட்டெண் 158 (பி.எம்.2.5) எனவும் சுட்டெண் மேலும் மோசமடைந்தால், கடுமையான அவதானம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பைத் தவிர அக்குறணை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் வளி மாசு நிலைமை மோசமாக உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.