விபத்தில் தந்தையும் மகனும் ஸ்தலத்தில் பலி, தாய் காயத்துடன் வைத்தியசாலையில்

Date:

ஹைலெவல் வீதியில் கொஸ்கம மிரிஸ்வத்த பகுதியில் சீமெந்து ஏற்றப்பட்ட லொறி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த குடும்பத்தாரின் தாய் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீமெந்து ஏற்றிய லொறி ஒன்று கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி சென்று கொண்டிருந்த போது திடீரென எதிர்திசையில் பாய்ந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொஸ்கம அலுபோதல பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய தந்தையும் 8 வயது சிறுவனும் உயிரிழந்துள்ளனர்.

கொஸ்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பத் வங்கி பற்றிய சந்தேகங்கள் அதிகரிப்பு!

இலங்கையின் வங்கித் துறையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ள ரூ. 13.5 பில்லியன்...

இந்திய துணை ஜனாதிபதி நாளை மறுநாள் இலங்கை வருகிறார்

இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் அரசு முறை பயணமாக...

நாட்டில் இன்று வெப்பம் அதிகரிக்கும்

நாட்டில் இன்று (17) வெப்பத்தின் அளவு எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கக்கூடும்...

400 கோடி பெறுமதி ஹெரோயின் மீட்பு

போதைப்பொருள் கடத்தப்பட்ட நிலையில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகில், 400...