ரஷ்யாவில் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்பது உறுதியாகிறது.
மூன்று நாளாக நடைபெற்ற வாக்களிப்பில் புட்டின் அபார வெற்றி பெறுவார் என்று தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்பு காட்டுகிறது.
அதன்மூலம் 2030 வரை புட்டின் ஜனாதிபதி பொறுப்பில் தொடர வழியேற்பட்டுள்ளது.
சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு நீண்ட காலம் ரஷ்யாவில் ஜனாதிபதி பொறுப்பிலிருக்கும் தலைவர் என்ற பெருமை புட்டினைச் சேர்கிறது.
அவருக்கு சுமார் 88 சதவீதம் வாக்குகள் கிடைத்திருப்பதாக முன்னோடி அதிகாரபூர்வ முடிவுகள் காட்டுகின்றன.
பிரசாரத் தலைமையகத்தில் பேசிய புட்டின் தேர்தல் வெற்றி ரஷ்யாவை மேலும் வலுவாகவும், இன்னும் செயல்திறன்மிக்கதாகவும் திகழ வழியமைக்கும் என்று கூறினார்.