பாதாள உலகக் குழுக்களை ஒடுக்குவதற்காக விசேட பயிற்சியளிக்கப்பட்ட 20 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார். பாதாள உலகக் குழுக்களை இம்மாத இறுதிக்குள் கட்டுப்படுத்தாவிட்டால், அடுத்த மாத இறுதிக்குள் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பம்பலப்பிட்டி பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற பாதாள உலகக் குழுக்களை ஒடுக்குவதற்காக விசேட பயிற்சியளிக்கப்பட்ட 20 விசேட பொலிஸ் குழுக்களை ஸ்தாபிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.