முன்னிலை சோஷலிச கட்சியின், மக்கள் போராட்ட அமைப்பு இன்று (20) கொழும்பில் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் போது 29 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பிக்குகளும் மூன்று பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றன.
லஹிரு வீரசேகர மற்றும் துமிந்த நாகமு ஆகியோரும் அங்கு கைது செய்யப்பட்டனர்.