மைத்திரியை உடனே கைது செய்க!!

0
194

ஈஸ்டர் தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டை சமர்ப்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

அந்த கருத்தை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதியை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

“இது இரகசியமாக வைக்கப்பட வேண்டிய விடயம் அல்ல. நாட்டு மக்கள் இதனை அறிந்து கொள்ள வேண்டும். இந்நாட்டு அப்பாவி மக்களின் உயிர்கள் அழிக்கப்பட்டுள்ளன.” என் காவிந்த தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here