சுற்றுலாத்துறைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை மட்டும் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
வழங்கப்படும் தீர்மானங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை இடம்பெறும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
“நாட்டில் நிலவும் பணப்பரிவர்த்தனை பிரச்சனையால், வாகனங்களை கொண்டு வருவதை நிறுத்திவிட்டோம். ஆனால் சுற்றுலாத்துறையில் 6 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. இப்போது எங்களின் வாகனங்கள் பழையதாகிவிட்டன. கிடைக்கும் வாகனங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. அதனால்தான் சுற்றுலாத் துறைக்காக 250 பேருந்துகள் மற்றும் 750 வேன்கள் கொண்டுவர அமைச்சரவை முடிவு செய்தது. 1000 வாகனங்கள் மட்டுமே கொண்டுவரப்படுகின்றன.