அண்மையில் மத்திய வங்கியை கொள்ளையடித்த நபர் ஒருவர், தானும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் இரட்டை வேடம் போடுவதாகக் கூறினார். அவர்கள் என்ன அவமானங்களைச் செய்தாலும் ஐக்கிய மக்கள் சக்தி மத்திய வங்கி திருடர்களை விரட்டியடித்தது. மத்திய வங்கியை கொள்ளையடித்து, மத்திய வங்கியை அழித்த பிணை முறி மோசடியில் பிரதான சூத்தி்தாரியாக செயற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டு புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளோம். நாட்டின் 220 இலட்சம் மக்களுக்கு முன்னுரிமை அளித்த பயணமாகவே ஐக்கிய மக்கள் சக்தியின் பயணம் அமையும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
திருடர்களை விரட்டியடித்து தூய்மையான பயணித்தை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும். மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை நிச்சயம் நாம் ஏற்படுத்தித் தருவோம். இந்நாட்டு மக்களுக்கான தூய்மையான ஆட்சியை நாம் மக்களுக்காக முன்னெடுப்போம். ஐக்கிய மக்கள் சக்தி செய்து வரும் அபிவிருத்தியை எந்தவொரு வீராப்பு பேசும் தலைவராலும் செய்ய முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 151 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், புத்தளம், சிலாபம் ,ஆராச்சிக்கட்டு, பத்துலுஓய மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஏப்ரல் 10 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில், கல்லூரியின் நடனம்,வாத்தியம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுவினருக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்குத் தேவையான ஒரு இலட்சம் ரூபா நிதியையும் நன்கொடையாக வழங்கி வைத்தார்.
ஸ்மார்ட் சாதனங்கள் இல்லாத பாடசாலைகளுக்கு கணினி வழங்குவது எவ்வாறு தவறாக பார்க்கப்படுகிறது என்ற பிரச்சினை உள்ளது. சேறு பூசும், சமூகநீதியைப் பற்றிப் பொய்ப் பெருமை பேசும், மக்கள் மத்தியில் பரோபகாரிகளாகச் செயல்படும் தற்பெருமைக்காரர்களால் தான் இவை பிழையாகப் பார்க்கப்படுகின்றன. இவ்வாறு விமர்சங்களை முன்வைக்கும் போலி சோசலிசவாதிகளின் பிள்ளைகள் தனியார் பாடசாலைகள், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களுக்குச் செல்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கொரோனா கோவிட் குறித்து, முக கவசம் குறித்து, கொரோனா தடுப்பூசிகள் குறித்து, பெண்களின் ஆரோக்கியத்துவாய் சுகாதார வசதிகள் குறித்து தான் கூறிய விடயங்கள் இன்று யதார்த்தமாகியுள்ளது. அறிவியலை புறக்கணித்துவிட்டு நாட்டை ஏமாற்றும் சூத்திரங்களை கூட அமுல்படுத்தும் சிலர் வாழும் நாட்டில் நாம் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.