13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

Date:

இன்று (11) பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் பலத்த மின்னலுக்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் 13 மாவட்டங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையானது மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் அமுலாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியம் காணப்படுவதால், மின்னலினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காலநிலை அதிகாரிகள் மக்களை கோருகின்றனர்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும் என சுட்டிக்காட்டப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...