மத்தல விமான நிலைய முகாமைத்துவம் இந்தியா, ரஷ்யாவிடம் ஒப்படைப்பு

Date:

மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையத்தின் வசதிகளைப் பயன்படுத்துவதற்காக ஆர்வங் காட்டுகின்ற தரப்பினர்களிடமிருந்து விருப்புக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்காக 2023.01.09 அன்று
இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, விருப்புக் கோரல்கள் பெறப்பட்டுள்ளதுடன், 5 நிறுவனங்கள் விருப்புக் கோரல்களைச் சமர்ப்பித்துள்ளன.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவின் விதந்துரைக்கமைய மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் முகாமைத்துவத்தை இந்தியாவின் M/s Shaurya Aeronautics (Pvt) Ltd இற்கும் ரஷ்யாவின் Airports of Regions Management Company இற்கோ அல்லது அதனுடன் இணைந்த தொழில் முயற்சியாளர்களுக்கு 30 வருடகாலத்திற்கு ஒப்படைப்பதற்காக துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பணவீக்கம் 5.5% ஆக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்த பணவீக்கம்...

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...

முக்கிய அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில...

அன்று நடந்த சம்பவம் ஒன்று!

இது 2022 ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நடந்த சம்பவம் என...