கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. ஈழவேந்தன் காலமானார்

0
229

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க. ஈழவேந்தன் இன்று கனடாவில் காலமானார்.

கனடா ரொரன்ரோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 92 வயதில் அவர் காலமாகியுள்ளார்.

யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த ரயில் நிலைய அதிபர் கனகசபாபதியின் மகனான அவர், யாழ். பரியோவான் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு வெஸ்லி கல்லூரியிலும் கல்வி பயின்றார்.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஈழவேந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டு நாடாளுமன்றம் சென்றார்.

பின்னர் கனடா சென்ற அவர் அங்கு அரசியல் தஞ்சம் பெற்ற நிலையில் அங்கு பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தார்.

கனகேந்திரன் என்ற தனது இயற்பெயரைத் தூய தமிழில் ஈழவேந்தன் என மாற்றிய அவர் தமிழ் மொழிப் பற்றாளராகவும் விளங்கினார்.

தமிழீழக் கொள்கையில் மிகவும் பிடிப்புள்ளவராகச் சமரசமில்லாத போராளியாக இறுதி வரை ஈழவேந்தன் செயற்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here