விசா கட்டணம் குறித்து அரசின் தீர்மானம்

0
147

வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வரும் பொழுது 30 நாட்களுக்கான விசா கட்டணமாக அறவிடப்பட்ட 50 டொலர்கள் என்ற பழைய தொகையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இந்தியா, சீனா, ஜப்பான், ரஷ்யா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, போன்ற 07 நாடுகளுக்கும் இதுவரை இலவசமாக வழங்கப்பட்ட விசா நடைமுறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த நாட்டுக்கு வரும் வெளிநாட்டவருக்கான விசா நடவடிக்கைகளை முன்னெடுக்க குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here