Monday, November 25, 2024

Latest Posts

டயகம சிறுமி ஹிஷாலினி மரண வழக்கில் ரிசாத் பதியூதீன் நிரபராதி என விடுதலை

3 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு சொந்தமான வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய டயகம சிறுமி தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து ரிசாத் பதியுதீன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ரிசாத் பதியுதீனின் மனைவி, மாமனார் மற்றும் சிறுமியை பணிப்பெண்ணாக அமர்த்திய நபர் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடருமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல உத்தரவிட்டதுடன், நான்காவது சந்தேகநபர் ரிசாத் பதியுதீன் மற்றும் ஐந்தாவது சந்தேகநபர் பதியுதீன் அப்துல் ரிஷாத் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் சிறுமியை பணிப்பெண்ணுக்கு கொடுத்ததாக கூறப்படும் முதலாம் சந்தேகநபரான பொன்னையா பண்டாரம், இரண்டாவது சந்தேகநபரான ரிஷாத் பதியுதீனின் மாமனார் என கூறப்படும் அலி இப்ராஹிம் கிதார் மொஹமட் மற்றும் மூன்றாவது சந்தேகநபர் ரிசாத் பதியுதீனின் மனைவியான கிதார் மொஹமட் ஷிஹாப்தீன் ஆயிஷா அவர்கள் மீது இவ்வாறான வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மூவருக்கும் எதிராக கொடுரமான வேலையாட்களை பணியமர்த்துதல், மனித கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு தெற்கு பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

டயகம பகுதியைச் சேர்ந்த ஹிஷாலினி ஜூட் குமார் என்ற சிறுமி, பதியுதீனின் வீட்டிற்கு பணிப்பெண்ணாக வந்திருந்த நிலையில், உடலில் தீப்பற்றியதால் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு மரணம் நிகழ்ந்துள்ளது நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்போது சிறுமிக்கு 15 வயது என்பதுடன் சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்ட பொரளை பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.

அந்த வீட்டில் பணிப்பெண்ணாக பல வருடங்கள் பணியாற்றிய நிலையில், 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் திகதி அவரது உடலில் தீப்பிடித்ததாகவும், பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 15 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.