தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானத்துடன் சில தோட்டக் கம்பனிகள் உடன்படாத நிலையில், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கான பிரேரணை ஜனாதிபதியினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச சம்பளத்தை மதிப்பிடுவதற்கும் தோட்டக் கம்பனிகளின் மதிப்பிடப்பட்ட சம்பளத்தை வழங்குவதற்கான திறனை ஆராய குழுவொன்றை நியமிப்பதற்கும் சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும் தோட்டக் கம்பனிகளின் காணி குத்தகை ஒப்பந்தங்களை இரத்துச் செய்வதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
மோசமான நிர்வாகத்தால் ஊதியம் வழங்க முடியவில்லை என குற்றம் சுமத்தப்பட்டது.