இலங்கையில் நல்லிணக்கம் தொடர்பில் பிரிட்டன் விடுத்துள்ள வலியுறுத்தல்

0
203

இலங்கை, மனித உரிமை விடயத்தில் பிரிட்டனின் முன்னுரிமைக்குரிய நாடாக விளங்குகின்றது என பிரிட்டனின் பொதுநலவாய வெளிவிவகார அபிவிருத்தி அலுவலக இராஜாங்க அமைச்சர் மேரி ட்ரெவல்யன் தெரிவித்துள்ளார்.

மேலும், நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்காக அனைவரையும் உள்வாங்கிய நடைமுறையின் அவசியத்தை பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பில் பிரிட்டனின் நிலைப்பாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நல்லிணக்க பொறிமுறை குறித்து பாதிக்கப்பட்ட சமூகத்தினர் வெளியிட்டுள்ள குறிப்பிடத்தக்க சந்தேகங்களை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்த பொறிமுறையும் சுயாதீனமானதாக அர்த்தபூர்வமானதாக பாதிக்கப்பட்ட சமூகங்களின் நம்பிக்கையை பெறக்கூடியதாக காணப்படவேண்டும் என தெரிவித்துள்ள மேரி ட்ரெவல்யன் முன்னைய நிலைமாற்றுக்கால செயற்பாடுகளின் தொடர்ச்சியாகவும் பொறுப்புக் கூறலிற்கான பாதைகளை வழங்குவதாகவும் காணப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here