லயன் வீடுகளை புனரமைக்க களத்தில் இறங்கும் இராணுவம்

0
147

மாத்தளை, ரத்தோட்டை, பிட்டகந்த என்ற தோட்டத்தில் லயன் வீடுகளில் வாழும் மக்களின் கூரைகளை புனரமைக்கும் பணிகளை சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்க பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த புனரமைப்பு பணிகளை இரண்டு மாத காலப்பகுதிக்குள் நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

இந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் மிக நீண்ட கால தேவையாக கருதப்படும் மேற்படி வேலை திட்டத்தை முன்னெடுத்து தருமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பின்தங்கிய மற்றும் தோட்டப்புறங்களில் வாழும் மக்களுக்கு தேவையான நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் தங்களுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இதற்கமையவே இந்த வேலை திட்டத்தை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக இரண்டு மாத காலப்பகுதிக்குள் முன்னெடுக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம். சிவஞானம் உட்பட ரத்தோட்டை மற்றும் அம்பன் கோறளை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here