நெடுந்தீவு இளைஞர் படுகொலை: பற்றைகளில் மறைந்திருந்த 3 சந்தேகநபர்களும் மடக்கிப் பிடிப்பு!

Date:

யாழ். நெடுந்தீவில் இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட மூன்று சந்தேகநபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற படுகொலையுடன் நால்வர் தொடர்புபட்டனர் என்று செய்திகள் வெளிவந்திருந்தன. அவர்களில் ஒருவர் விபத்துக்குள்ளான நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

எஞ்சிய மூன்று சந்தேகநபர்களும் நெடுந்தீவுப் பகுதியில் உள்ள பற்றைகளில் மறைந்திருந்த வேளை நேற்று (22) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு நேற்று இரவு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்க டொலர் விற்பனை விலை மீண்டும் உயர்வு!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நேற்று (14) ஆம் திகதி தினசரி...

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...