Saturday, November 23, 2024

Latest Posts

போருக்குப் பின்னரான இலங்கை குறித்த படம் கொழும்பில் திரையிடப்படுகிறது

ஷெரின் சேவியர் இயக்கிய இந்திய-இலங்கைக் கூட்டுத் தயாரிப்பான “முற்றுப்புள்ளியா..?” (நாளைய தினத்தின் வடுக்கள்) கொழும்பில் இன்று திரையிடப்படுகின்றது.

திரையிடலைத் தொடர்ந்து ஆவணப்படத் தயாரிப்பாளர் அனோமா ராஜகருணா தலைமையில் கலந்துரையாடல் நடைபெறும்.

நான்கு நபர்கள் போருக்குப் பிந்தைய இலங்கையில் தங்கள் வாழ்க்கையை வழிநடத்தும் கதையை 2016ஆம் ஆண்டின் இத்திரைப்படமானது கூறுகின்றது. அவர்களின் மௌனமானப் போராட்டங்கள், நிறைவேறாத ஆசைகள், அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்களை என்பவற்றைப் பற்றி இத்திரைப்படம் எடுத்துரைக்கின்றது. ஏனையோரைப் போல், கௌரவம், நீதி மற்றும் சமாதானத்திற்காக ஏங்கும் தமிழர்களின் கதையை இது கூறுகின்றது.

இப்படம் யாழ்ப்பாணத்தில் வாழும் முன்னாள் போராளி, வன்னிப் பகுதியைச் சேர்ந்த வரலாற்றாசிரியர், கொழும்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் சென்னையைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளர் ஆகியோரின் பார்வையில், போருக்குப் பின் இலங்கையில் நடந்த உண்மைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டது.

இத்திரைப்படமானது அவர்களின் ஆறாமல் இருக்கும் காயங்கள், புறக்கணிக்க கடினமான வடுக்கள் , வலி மற்றும் எதிர்பார்ப்பின் உணர்ச்சிகள் போன்ற வேதனை மற்றும் துன்பகரமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றது. இழப்பு, துரோகம் மற்றும் போராட்டம் ஆகியவற்றை உள்ளடக்கும் மற்றும் கவனத்தைப் பற்றிக்கொள்ளும் இக் கதை ஊக்கமளிப்பதோடு இறுதியில் செயற்பாட்டிற்கு அழைப்பு விடுக்க முயல்கின்றது.

“தமிழர்களின் போராட்டத்தின் வரலாறு – புலிகளுடனான தமிழ் சமூகத்தின் உறவைப் போலவே – சிக்கலானது, ஆனால் கௌரவம் மற்றும் சமாதானத்திற்கானப் போராட்டம் இன்னும் நிறைவு பெறுவதிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. வலி தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும்போது , நீதிக்கான அழைப்புகள் கவனிக்கப்படாமல் இருப்பதனால், நாளைய தினத்தின் வடுக்கள் பெரிதாவதோடு ஆழமாகின்றன,” என்கின்றார் சுயாதீன திரைப்படத் தயாரிப்பாளர் ஷெரின் சேவியர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.