ராவயவை விற்கச் சென்ற விக்டர் ஐவனுக்கு சிக்கல் – நீதிமன்றம் தடை விதிப்பு

Date:

ராவய பிரைவேட் லிமிட்டெட்  நிறுவனத்தை விற்பனை செய்யவோ இடமாற்றம், வாடகை அல்லது குத்தகை, இடிப்பு, அதன் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை அகற்றுதல் மற்றும் செய்தித்தாள் வெளியிடுவதற்கு எதிராக கட்டாய தடை அறிவிப்புடன் பல தடை உத்தரவுகளையும் கல்கிஸ்ஸ நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

13 மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த கல்கிஸ்ஸ மாவட்ட நீதிபதி எம்.எஸ்.கொடிதுவுக்கு இந்த உத்தரவுகளை வழங்கினார்.

ராவயவுக்கு பணம் கொடுத்த 479 பேர் கொண்ட குழுவுக்குத் தெரிவிக்காமல், தலைவர் விக்டர் ஐவன் தனது மருமகன் மற்றும் மைத்துனரை இயக்குநர் குழுவில் சேர்த்து, நிறுவனத்தை விற்பனை செய்ய ரகசியமாகத் திட்டமிட்டார் என்பது வழக்கின் விவாதங்களில் முன்வைக்கப்பட்டது. பொது பணத்தில் கட்டப்பட்ட ராவய சொத்துக்களை விற்று பணம் பெறும் செயல்முறையை நிறுத்துமாறு மனுதாரர்கள் கோரினர்.

அதனை நிரூபிக்கும் வகையில், ராவய பத்திரிகை அலுவலகம் மற்றும் அலுவலகம் பூட்டப்பட்டதுடன், பத்திரிக்கை அலுவலகம் “விற்பனைக்கு” என காட்சிப்படுத்தப்பட்ட பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளும் முறைப்பாடுடன் முன்வைக்கப்பட்டன.

பணத்தை முதலீடு செய்தவர்களுக்காக பத்திரிகையை தொடர்ந்து நடத்துவதற்கு ஒப்புக்கொண்ட நம்பிக்கையை விக்டர் ஐவன் வேண்டுமென்றே புறக்கணித்ததன் மூலம் சொத்துக்களை விற்க எந்த காரணமும் இல்லை என்றும் ராவய பத்திரிகை ஒரு போதும் நட்டத்தை சந்திக்கவில்லை என்றும், அதன் அடிப்படையில் நடத்தப்பட்டது என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

மேற்கூறிய அனைத்து உண்மைகள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் விவாதங்களை கருத்திற்கொண்டு,   ராவய தலைவர் விக்டர் ஐவன் மற்றும் பணிப்பாளர் சபையின் இந்த தன்னிச்சையான செயல்களுக்கு தடை உத்தரவு மற்றும் கட்டாய தடை உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

மேலும், விக்டர் ஐவன் தனது குடும்பத்தினரையும் மேலும் சிலரையும் இணைத்து ராவய சொத்தை விற்று தனிப்பட்ட ரீதியில் கையகப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் திட்டமிட்டு மேற்கொண்டார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த வழக்கில் பணிப்பாளர் சபைக்கு மேலதிகமாக ராவய ஆசிரியர் விமலநாத் வீரரத்னவுக்கும் 7வது பிரதிவாதியாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் சுதர்மா கே. கமகேயின் ஆலோசனையின் பேரில் சட்டத்தரணி மனோஜ் சஞ்சீவ ஆஜரானார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...