ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பொஹொட்டுவ சின்னத்தில் வேட்பாளரை முன்வைக்க அக்கட்சி நேற்று (29) மாலை தீர்மானித்துள்ளது.
கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அக்கட்சியின் அரசியல் குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த முடிவு குறித்து கருத்துக்கணிப்பும் நடத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 உறுப்பினர்கள் உள்ளனர், அவர்களில் 79 உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். 79 பேரில் 11 பேர் மட்டுமே பொஹொட்டுவ வேட்பாளரை முன்னிறுத்துவதற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
பிரசன்ன ரணதுங்க, மஹிந்தானந்த அளுத்கமகே, காஞ்சன விஜேசேகர, ரமேஷ் பத்திரன, பந்துல குணவர்தன, எஸ். பி. திஸாநாயக்க, மோகன் பி. டி சில்வா, கனக ஹேரத், கோகிலா குணவர்தன, சஹான் பிரதீப் மற்றும் பிரதீப் உந்துகொட ஆகியோர் எதிராக உள்ளனர்.
அத்துடன், கட்சிக்கு அப்பாற்பட்டு மற்றுமொரு வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் நபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான பிரேரணை நேற்று நிறைவேற்றப்பட்டதுடன், வாக்களிப்பின் போது 06 பேர் மாத்திரமே எதிராக வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொஹொட்டுவ ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது இன்னும் சில தினங்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.