அனைத்து மாகாணங்களிலும் ஐக்கிய மக்கள் சக்தி வெல்லும் – சஜித் அதீத நம்பிக்கை

0
64

வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாகாணங்களிலும் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றியடையும் என்று அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பதுளை மாவட்டம், பசறை தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதிக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பசறை நகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து மாகாணங்கள், அனைத்து மாவட்டங்கள், அனைத்து பிரதேசங்கள், வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு, போன்ற அனைத்து இடங்களிலும் ஐக்கிய மக்கள் சக்தி வெல்லும் என்பதை சகல ஆய்வறிக்கைகளும் வெளிக்கொணர்ந்துள்ளன. எனவே, நாட்டை வெல்லும் பயணத்தை முன்னெடுப்போம்.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here