யாழ்ப்பாணம், கிளிநொச்சிக்கு உடனேநிரந்தர அரச அதிபர்களை நியமிக்கவும்- ரணிலுக்கு அவசர கடிதம் அனுப்பிய விக்கி

Date:

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான நிரந்தர அரச அதிபர்களை உடனடியாக நியமிக்குமாறு கோரிய அவசர கடிதம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான நிரந்தர அரச அதிபர்களின் நியமனம் தொடர்பில் ஏற்கனவே விக்னேஸ்வரன் எம்.பியால் ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியபோதும் அதனை நிறைவேற்றாது தரம் போதாமை காரணமாகப் பதில் அரச அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, நிரந்தர அரச அதிபர்களை நியமிக்குமாறு கோரியே இந்த அவசர கடிதம்  நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இரண்டாவது தடவையாகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இன்று முதல் 3 நாள் பயணமாக வடக்கே வரும் ஜனாதிபதியிடம் மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை முன்வைக்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...