இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு!

0
241

இஸ்ரேலில் நிலவும் மோதல் நிலைக்கு மத்தியில் அந்நாட்டில் உள்ள அனைத்து இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு அவசரநிலையில் செயல்படுவதற்காக தொலைபேசி இலக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் சில வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில், இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரவிடம் “அத தெரண” மேற்கொண்ட விசாரணையின் போது, ​​தற்போது சுமார் 11,000 இலங்கையர்கள் இஸ்ரேலில் பணிபுரிவதாகவும் அவர்களில் 70 வீதமானவர்கள் தாதியர்களாக கடமையாற்றுவதாகவும் தெரிவித்தார்.

எஞ்சிய 30 வீதமானோர் விவசாயம் மற்றும் நிர்மாணத்துறையில் பணிபுரிவதாக நிமல் பண்டார குறிப்பிட்டார்.

இதனிடையே, இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here