ஆதரிக்கும் வேட்பாளர் யார்? ரிசாத் பதியுதீன் வெளியிட்ட அறிவிப்பு!

0
149

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரிக்கும் வேட்பாளர் யார் என்பது எதிர்வரும் 14ஆம் திகதி காலை 10 மணிக்கு அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்

தாங்கள் ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இருப்பதால் அக்கூட்டங்களில் கலந்துகொள்வதாகவும், ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் தற்போதைய ஜனாதிபதியும் ஆதரவு கோரி கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here